மேற்கு வங்கம்: மேற்குவங்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.2000, அரசு பேருந்தில் இலவசம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் கார்கே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ. 2,000 நிதியுதவி, முதுகலை நிலை வரை இலவசக் கல்வி மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும். விளிம்புநிலை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 நிதியுதவியும், விவசாயத் தொழிலில் ஈடுபடுவோருக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரமும் வழங்கப்படும்.
காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களையும் ஓராண்டுக்குள் இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.