தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என வலியுறுத்தி மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கடைவீதி, தெற்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை , பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வந்தடைந்தது. பேரணியின் போது சிலம்பம் மாணவ மாணவிகள் பங்கேற்று சிலம்பம், மான்கொம்பு, இரட்டை கம்பு, சுருள், வாள்வீச்சு, கம்புசண்டை, அலங்கார சுற்று பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன் தலைமை வைகித்து துவக்கி வைத்தார். பாபநாசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி , தலைமை காவலர், யோகா பயிற்சியாளர் ராம்பிரசாத், சிலம்ப ஆலோசகர்கள் குமார், ரஜினிகாந்த், மணிமாறன், குழந்தைவேலு, பிரகாஷ், காவியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தலைமை சிலம்பம் தேர்வாளர் அய்யப்பன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தகுதி திறனாய்வு நடத்தினார். தகுதியானவர்களுக்கு பதக்கம் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது.