சென்னை : ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா? இல்லை என்றால் உடனடியாக இணைத்துக் கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால், ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாததுடன், பெயர் நீக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளது.
குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.
அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.