வெள்ளிக்கிழமை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்
சென்னை: வெள்ளிக்கிழமை முதல் பிரச்சாரம்… தேமுதிக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.