கோடை விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம்… கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் 239 சேவைகளாக இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன