பிரதமர் மோடிக்கு எதிரான அலையே வீசுகிறது… முதல்வர் சித்தராமையா சொல்கிறார்
மைசூர்: மைசூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை. அதேநேரம் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான அலையே இந்தியாவில் காணப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு கேரண்டி திட்டங்களால் பல கோடி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்றார்.