தியாகத்தின் வண்ணம் காவி என்கிறார் தமிழிசை
சென்னை : சிவப்பு நிறத்தில் இருந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது தவறில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “காவி என்பது தியாகத்தின் வண்ணம். தேசியக் கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் காவி. DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து நமது தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர்” என கூறியுள்ளார்.