வரும் 26ம் தேதி கலைஞர் நினைவிடம் திறப்பு
சென்னை: சென்னை மெரினாவில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் வரும் 26ம் தேதி கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.