திருப்பதி: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஜீந்தர் குப்தா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது குடும்பத்தினருடன் இந்த நன்கொடை காசோலையை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.