சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. இச்சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.