சிங்கப்பூரில் கேபிஏ இன்ஜினியரிங் மற்றும் எக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி மனிதவள அமைச்சகத்தின் சேவை மையத்தை அணுகினார்கள். இதனை தொடர்ந்து தங்களது முதலாளிகளால் நான்கு மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் சிக்கி தவிக்கும் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 200 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.