கேரளா: ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து… வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி இவ்வளவு உயிர்களை இழந்த சோகத்திற்கு இடையே கேரளாவில் செப்., 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய அம்மாநில சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.