கோவை: கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில் சுமார் 2,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கேரள மாநிலம் திருச்சூருக்குச் சென்று குருவாயூர் கோவிலில் முதல்வர் தரிசனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
