சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு–தாம்பரம் இடையே இயக்கப்படும் 10 புறநகர் மின்சார ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் பொறியியல் மற்றும் சிக்னல் பணிகளுக்காக இன்று குறிப்பிட்ட நேரத்தில் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே பயணிகள் முன்கூட்டியே தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு, தேவையான மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
