திண்டிவனம் : அரசுப்பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் மற்றும் இதற்கு உதவிய பேருந்து நடத்துனர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அரசு பேருந்தில் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை கடத்திய நவீன்(23) மற்றும் கடத்தலுக்கு உதவிய பேருந்து நடத்துநர் சந்திரன் (52) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷன் பெற்றுக்கொண்டு சந்தேகம் வராத அளவிற்கு இந்த கடத்தல் நடந்துள்ளது. இவர்களிடமிருந்து 153 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.