தஞ்சை அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 24 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக சப் – இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாஞ்சிக்கோட்டை சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாஞ்சிக்கோட்டை இந்திராநகரை சேர்ந்த விஜயகுமார்(42) என்பதும், விற்பனைக்காக 14 மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தஞ்சை மாரியம்மன் கோவில் சன்னதி தெரு அருகே மது விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் – இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.