ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனில் இருந்து 4 நாட்டுப்படகுகள் மற்றும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், தங்கச்சிமடத்தை சேர்ந்த சூசை மார்ட்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டு படகுகளில் 33 மீனவர்கள்.
கடந்த 6ம் தேதி பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இந்த 4 படகுகளையும், மன்னார் தெற்கு கடலில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் ஜான்சன், இன்னாசி, கிரீன்சன், சனலக, செந்திடிகள் உள்பட 33 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். என பாம்பன் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 7 மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மீனவர்கள் 6 என 13 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை காவல்துறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று மாலை 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 109 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 52 பேர் விடுதலை செய்யப்பட்டு 12 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 45 மீனவர்கள் இலங்கை நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில் நேற்று 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்