தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரவுடி வெட்டி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் மகன் அறிவழகன் (35). மீன் வியாபாரி. காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த செப்.25ம் தேதி இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, இவரை அப்பகுதிக்கு வந்த சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக ோலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அறிவழகனும், திவாகரும் தனித்தனி வழக்கு தொடர்பாக ஆஜராகினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர், அறிவழகன் தனது நண்பர்கள் மகேந்திரன், சுரேஷ், ஆனந்த் ஆகியோருடன் மது அருந்தியபோது, அங்கு திவாகர் மற்றும் சிலர் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிழக்கு ோலீசார் வழக்குப்பதிவு கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகர் (24), நீத்துக்காரத் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஹரிஹரன் (24), கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் கோவிந்தராஜ் (26), ரெட்டிப்பாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்த சிவகணேசன் மகன் கந்தவேல் (24) உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் திவாகர், ஹரிஹரன், கோவிந்தராஜ், கந்தவேல் ஆகிய 4 பேரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.