விருத்தாச்சலம் : விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வங்கி கணக்கை தவறாக பயன்படுத்தி 7 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் எதுவும் வராமலேயே பொருட்கள் வந்ததாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அந்த பணத்தினை மீண்டும் எடுத்து வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வங்கி கணக்கிற்கு வந்த 7 கோடி ரூபாய் அளவு மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட மூவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.