கோயம்புத்தூர்: கோவை காந்தி பூங்காவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நேற்று கலைத் திருவிழா நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் கலைஞர்களை ஊக்குவித்தார். நாதஸ்வரம், கரகாட்டம், தப்பாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாகை சந்திரசேகர், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல முதல்வர் மன்றத்தை உருவாக்கியதாக தெரிவித்தார்.
கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1000-ல் இருந்து ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.