சென்னை: முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருப்பீர்கள். இதற்கு இயற்கை முறையில் ஆரோக்கியமான பானம் செய்வது சாப்பிடுங்கள். உடல்நலன் உயர்ந்து முடிகொட்டுதல் பிரச்னையும் தீரும்.
தேவையானவை:
பாதாம் பருப்பு- 10
பேரீச்சம் பழம்- 5
பசும் பால் – 1 கப்
தேங்காய்ப் பால்- கால் கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் – 1/8 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை: பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காயில் இருந்து பாலினைப் பிழிந்து கொள்ளவும்.
தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும். அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து இந்த ஆரோக்கியமான பானத்தை அருந்துவதால் உங்கள் உடலுக்கு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடுகள் நீங்கும் பொழுது முடி கொட்டுதல் பிரச்னையும் தீர்வாகும்.