விருதுநகர்: தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அஜித் குமாரின் சகோதரர் நவீன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.