சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
அதாவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது. உயிருக்கு பயந்து போடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைப்பது எப்படி நியாயமாகும். எனவே அப்போது பணியில் இருந்து அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.