பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் நேற்று துவங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 6,7,8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று, 8-ம் தேதி காலை 6,7-ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடத்திற்கும், மதியம் 8,9 வகுப்புகளுக்கு தமிழ் பாடத்திற்கும் தேர்வு நடந்தது. இன்று 9-ம் தேதி காலை 6,7-ம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடத்திற்கும், மதியம் 8,9 வகுப்புகளுக்கு ஆங்கில பாடத்திற்கும் தேர்வு நடக்கிறது. 16-ம் தேதி புதன்கிழமை காலை 6,7-ம் வகுப்புகளுக்குக் கணிதப் பாடத்திற்கும், பிற்பகல் 8,9-ம் வகுப்புகளுக்குக் கணிதப் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெறும்.

17-ம் தேதி வியாழக்கிழமை காலை 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு விருப்பப் பாடங்களுக்கும், மதியம் 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு விருப்பப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறும். 21-ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களுக்கும், மதியம் 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
22-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கும், பிற்பகல் 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறும். 23-ம் தேதி புதன்கிழமை காலை 6, 7-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களுக்கும், 24-ம் தேதி வியாழன் அன்று மதியம் 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். 6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.