
சென்னை: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை அங்கீகரிக்கும் வகையில் 1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற்றவர்களுக்கு விருதுத் தொகையாக ரூ. 5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்), ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
விருது பெறுபவர் முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”க்கு பொருத்தமான விருது பெறுபவர்களை தேர்வு செய்ய பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபட்டவர்கள்.

மேலும் இது தொடர்பாக சாதனை படைத்தவர்கள் தங்களது விண்ணப்பத்தை சென்னை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம். அவர்களின் விண்ணப்பத்தில் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் பணியின் விவரங்கள் மற்றும் சமூக நீதி தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
2024-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தத்தி பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியரை சென்றடைய டிசம்பர் 20-ம் தேதி கடைசி நாளாகும்.