சென்னை: லக்டோபேசிலஸ் டெல்புருக்லி எனப்படும் பாக்டீரியாக்களால் பால் நொதிக்கப்பட்டு தயிர் தயாராகிறது. இந்த பாக்டீரியா நொதித்தல் செயல்முறையின்போது லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இது தயிர் அடர்த்தியாக இருப்பதற்கு காரணமாகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக தயிர் கருதப்படுகிறது.
பற்கள் – எலும்புகளை வலிமையாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
இதயத்திற்கு நல்லது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
பளபளப்பான சருமம்- கூந்தலை பெற உதவும்
உடல் எடையை குறைக்கும், பொடுகை நீக்கும்.
செரிமானத்திற்கு துணைபுரியும் ஆற்றல் அளிக்கும். தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.