சென்னை: நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு. கருஞ்சீரகத்தை நம் உணவில் சேர்த்து வந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை வராது.
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் கால்சியம், இரும்புசத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களையும் இது கொண்டுள்ளது.
உடலுக்கு சுறு சுறுப்பை தரக்கூடியவை கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை இந்த கருஞ்சீரகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கருஞ்சீரகம் சீராக்க வல்லது. மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை கொண்டது.
அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு.