தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
டிட்டோஜாக் வரும் 22-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சூழலில், டிட்டோஜாக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான கூட்டம் வரும் 14-ம் தேதி சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், அனைத்து உயர்மட்ட டிடோஜாக் குழு உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ. நரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.