சென்னை: பழங்களை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். எதனால் என்று தெரியுங்களா.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. பழங்களை பொறுத்தவரையில், அனைத்து பழங்களிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. பழங்களை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
நம்மில் அதிகமானோர் பழங்களை, உணவு உட்கொண்ட பின்பு தான் சாப்பிடுவதுண்டு. ஆனால், உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவது சரியானது அல்ல. இவ்வாறு பழங்களை சாப்பிடும் போது, வயிற்றின் வழியே நேரடியாக குடலுக்குள் செல்ல தயாராக இருக்கும் பழங்கள், நாம் உணவு உட்கொண்ட பின் உண்பதால், பழங்கள் நேரடியாக குடல் பகுதிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.
இதனால் நாம் உட்கொண்ட உணவும், பழங்களும் இணைந்து அழுகி புளித்து, அமிலமாக மாறிவிடுகிறது. பழங்கள் வயிற்றில் உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுடன் கலக்கும் போது, நாம் உட்கொண்ட அனைத்து உணவுகளும் கெட்டு போய்விடும். இதனால், நமக்கு பலவிதமான வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பழங்களை உணவுக்கு பின் சாப்பிடுவதை தவிர்த்து, உணவுக்கு முன் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அது தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.