சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால் ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.