சென்னை: பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தொடர்பாக அவதூறு மற்றும் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட முக்தார் அஹமது மற்றும் திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பாஜக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளரான அலிஷா அப்துல்லா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் விமர்சித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் முக்தார் அஹமது மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், திருச்சி சூர்யா முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் தலைமறைவாக இருந்த முக்தார் அஹமதுவையும் தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கருதி, இருவருக்கும் எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான அவதூறு மற்றும் இழிவான கருத்துக்களுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
முக்தார் அஹமது, திருச்சி சூர்யா, குண்டர் சட்டம், அலிஷா அப்துல்லா, சென்னை போலீஸ்,
Mukthar Ahmed, Trichy Surya, Goondas Act, Alisha Abdullah, Chennai Police