தஞ்சாவூர்: விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் கைதை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஓஎன்ஜிசி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேற்று திருவாரூர் மாவட்டம் நீதிமன்றம் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிஆர் பாண்டியனை விடுதலை செய்ய வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். விடுதலை செய்யாத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.