தஞ்சாவூர்: தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய மோடி அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகள் நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும், விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பித்தும் கருப்பு பட்டை அணிந்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன், தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் ஆகியோர் தலைமை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு விவசாயிகள் சகத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினருமான மாரிமுத்து போராட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள நான்கு சட்ட தொகுப்புகள் கைவிடப்பட வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். இந்திய வேளாண் சந்தைகளில் உலகப் பெரு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. ஜனநாயக விரோத வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த எஸ் ஐ ஆர் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்ட தலைவர் செல்வராஜ், பொருளாளர் ஆண்ட்ரு கிரிஸ்டி, ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, சிஐடியு மாநிலச் செயலாளர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் பேர் நீதி ஆழ்வார், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பி.செல்வராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், நிர்வாகி ரமேஷ், ஹெச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், மாவட்ட தலைவர் செல்வராஜ், யூடியூசி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், மாவட்ட செயலாளர் வடக்கு தர்மராஜ், மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், தெற்கு இராமச்சந்திரன்,வடக்கு தங்க சக்கரவர்த்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர்கள் மக்கள் அதிகாரம் காளியப்பன், சமவெளி விவசாயிகள் சங்கம் பழனிராஜன் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, ஜனநாயக விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகி முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் வாசு, பக்கிரிசாமி, கருப்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.