பொள்ளாச்சி: கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அடுத்து கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக வால்பாறைக்கு சுற்றுலா செல்லக்கூடியவர்கள் கீழே உள்ள ஆழியார் அணை, கவியருவியில் குளித்து விட்டே மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்கிறார்கள். ஆனால் தற்போது இந்த கவியருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.