திருச்சி: வெளிநாட்டு வேலை என்று கூறி மோசடி செய்த திருச்சி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அனுப்பி, ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைப்பதற்கு உடந்தையாக இருந்ததாக திருச்சியை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரோஷன் கன்சல்டன்சி நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சித்த முத்து என்பவர் அளித்த புகாரின்பேரில், அந்த நிறுவன உரிமையாளரான பாத்திமா கைது செய்யப்பட்டார். மேலும் அந்நிறுவன ஏற்பாட்டின் மூலம் தாய்லாந்து செல்ல இருந்த 2 தடுத்து நிறுத்தி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.