கோவை: கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தப்படவிருந்த 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ் மற்றும் அதை வாங்கிய சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலவசமாக வழங்கப்பட்ட வேட்டி மற்றும் சேலைகள் எப்படிப் பெற்றவை என்பதைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.