சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நரசிங்கபுரம், செல்லியம்பாளையம்,கல்பகனூர் கொத்தம்பாடி ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.