தஞ்சாவூர்: பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்? எவ்வாறு கையாள வேண்டும் என விழிப்புணர்வை தீயணைப்புத் துறையினர் ஏற்படுத்தி உள்ளனர்.
நாளை 20ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் தீயணைப்புத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதைப்போல் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பட்டாசுகளை எவ்வாறு கையாள வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது கைகளில் வைத்துக்கொண்டு சாகசத்தில் ஈடுபடக்கூடாது என விழிப்புணர்வு வழங்கினர். மேலும் பட்டாசு விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.