சென்னை: பொது காப்பீடு எடுக்காமல் இருக்கீங்களா. இன்றைய காலக்கட்டத்தில் இது மிகவும் முக்கியமானது. உடனே எடுங்க.
பொதுவாக காப்பீட்டை பொறுத்தவரை இரண்டு வகையான முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை, general insurance எனப்படும் பொது காப்பீடு மற்றும் life insurance எனப்படும் ஆயுள் காப்பீடு. இதில் ஆயுள் காப்பீடு என்பது உயிர் உள்ளவற்றிற்கு, அதாவது மனிதர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக செய்யப்படும் காப்பீடு. மற்றொரு புறம் இருப்பது, பொது காப்பீடு, இது உயிர் இல்லாத எந்த ஒரு பொருளுக்கும் செய்யக்கூடிய காப்பீடு.
உதாரணமாக, வாகனம், வீடு, பயணத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய என்று, உயிரற்ற பொருட்களின் பாதுகாப்பிற்காக செய்யப்படுபவை. காப்பீடு என்பது, எதிர்பாராத விபத்து அல்லது நிகழ்வுகளுக்கு இழப்பீடு பெறுவதற்காக செய்யப்படும் முன் ஏற்பாடு.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏராளமான மக்களிடையே, எதிர்பாராத அபாயங்களின் விலையை பகரிந்து கொள்வதன் மூலம் காப்பீடு செயல்படுகிறது. பொது காப்பீடு என்பது ஒருவரின் வீடுகள், கார்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தீ விபத்து, வெள்ள அபாயம், நில நடுக்க பாதிப்பு, புயல் பாதிப்பு, விபத்து, பயணத்தின் போது ஏற்படும் இழப்புகள் போன்ற அபாயங்களின் நிதி தாக்கத்திலிருந்து, நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பொது காப்பீடு மிகவும் அவசியம். எனவே உடன் பொது காப்பீடு பற்றி தெரிந்து காப்பீடு செய்யுங்கள்.