தஞ்சாவூர்: நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த கோரி தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோரின் மாநிலப் பாதுகாப்பு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய சங்க அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமைப்பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும். கடந்த 2022}ம் ஆண்டுடன் 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு மாநில இணைச் செயலர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ராஜ்குமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்டத் துணைச் செயலர் வெங்கடேசன், மாவட்ட இணைச் செயலர் சிவகுமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.