திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஷோரூம் கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராவை துண்டித்து காரை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடியில் மாருதி கார் விற்பனை ஷோரூமின் கண்ணாடியை உடைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் காரை திருடிச் சென்ற நபரை, புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
பழனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷோரூமில் இரவு 11 மணிக்கு மேல் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துவிட்டு கார் திருடப்பட்டது.
ஷோரூமுக்கு அருகாமையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சிவக்குமார் என்பவரை கைது செய்து காரை மீட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.