நாகை: நாகை புதிய அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்னர். எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு வருவோரை முட்டுவது, அங்குள்ள வாகனங்களை இடித்துத் தள்ளுவது என கால்நடைகளால் அச்சுறுத்தல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.