சென்னை : பள்ளிகளில் காலை உணவில் பொங்கல்-சாம்பார் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் பசியுடன் கல்வி கேட்கக் கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.