சென்னை: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீரோட்டம் அதிகரித்தாலும் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அடையாறு ஆற்றோரம் உள்ள ஷட்டர்கள் முறையாக இயங்குகின்றனவா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.