சென்னை : ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2026-ம் ஆண்டு பொங்கலுக்கு மக்களுக்கு அரசு இலவசமாக வேட்டி-சேலை வழங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே 1.46 கோடி சேலைகளும், 1.44 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்ய தமிழக அரசு நிர்வாக ரீதியிலான ஆணையை பிறப்பித்துள்ளது.
மேலும், இலவச வேட்டி-சேலைக்காக அரசு முதல்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூன் மாத தொடக்கத்தில் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..