By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஸ்ரீரங்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஸ்ரீரங்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

Nagaraj
Last updated: December 29, 2025 5:03 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இதனால் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை தனது குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை பஞ்சபூதங்களில் நீர் தளத்திற்கு உகந்த தளமாக திகழக்கூடிய திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் மரியாதை அளித்தனர். இதனைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற ஜெய்சங்கர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார்.

இதையடுத்து ராஜகோபுரம் பின்புறம் தெரியும் இடத்தில் நின்று தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்த அவர், மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து, 10ஆவது நாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் உற்சவர் நம் பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அங்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாமி தரிசனம் செய்த பின் ஆரியபட்டால் வாசலில் இருந்து நடந்து சென்று தாயார் சன்னதிக்கு சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கம்பர் மண்டபத்தை பார்வையிட்டார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் வரலாற்று சிறப்புகள் மற்றும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து தலைமை பட்டர் சுந்தர், கோவிந்தராஜ் எடுத்துரைத்தனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இன்று தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக கோயில் வளாகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் வருகையால் மாவட்ட ஆட்சியர் சாலையில் இருந்து திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் முழுவதும் சாலையில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர்.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:policeSami DarshanSecurity ServicesSrirangam TempleUnion Ministerசாமி தரிசனம்பாதுகாப்பு பணிகள்போலீசார்மத்திய அமைச்சர்ஸ்ரீரங்கம் கோயில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?