By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
    புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் செய்தால் இன்னும் அழகாவீர்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது… பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது… பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தகவல்
தமிழகம்

அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது… பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தகவல்

Nagaraj
Last updated: May 11, 2025 6:33 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முக்கியமான அணைகள், நீர் தேக்கங்களில் அடுத்த வாரம் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 7-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.

இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும்.

இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!

நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!

உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…

கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் செய்தால் இன்னும் அழகாவீர்கள்!!!

TAGGED:DamsfearOperationspublicRehearsalRunningsecurityஅச்சம்அணைகள்இயங்கும்ஒத்திகைசெயல்பாடுகள்பாதுகாப்புபொதுமக்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?