சென்னை : பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் ஒழுங்கீனமாக செயல்பட்டால் 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் வைத்திருந்தாலோ (அ) விடைத்தாள் பறிமாற்றத்தில் ஈடுபட்டாலோ, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் தங்களின் திறமையை மட்டும் நம்பி தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். தேர்வில் ஒழுங்கீனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.