பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி உடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி தலைமை வகித்து பேரணியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செ.இராமநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இலஞ்சியம், பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர் ரஷ்யா, தன்னார்வலர் அபிநயா, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி, தேன்மொழி, சுஜாதா மற்றும் இந்திராகாந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில், பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை மாணவ, மாணவிகள் முழங்கிச் சென்றனர்.
மேலும், அரசுப்பள்ளியில் குழந்தைகள் படிப்பதனால் பெறக்கூடிய நலத்திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.