சென்னை: பரம் பொருள் அறக்கட்டளை நிறுவனர் கைது… சென்னையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் சொன்ன சர்ச்சையான கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த மகாவிஷ்ணு இன்று (செப்., 7) சென்னைக்கு திரும்பினார். அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் அங்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, “மகாவிஷ்ணுவின் பேச்சால் தான் எனக்கு தெளிவு கிடைத்தது. அன்பு என்று கூறுபவர், மாற்றுத்திறனாளி குறித்து எப்படி தவறாக பேசுவார், அனைவரின் மகிழ்ச்சியே அவரின் நோக்கம்.” என்றார்.